அசீமை வறுத்தெடுக்கும் கமல்!… பதில் சொல்ல முடியாமல் திணறும் அசீம்!… பரபரப்பான ப்ரோமோ இதோ!…

அசீமை வறுத்தெடுக்கும் கமல்!… பதில் சொல்ல முடியாமல் திணறும் அசீம்!… பரபரப்பான ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது தற்பொழுது சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்போது ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் 75 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு உள்ளது. யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ வெளியாகியுள்ளது இதில் கமல் அசிமை கோபத்துடன் கண்டிக்கிறார். அதாவது “உதாரணம் எடுத்துச் சொன்னது எப்படி கட்டப் பஞ்சாயத்து ஆகும். நான் அதை கண்டிக்கிறேன். இதுக்குமேல என்னால உங்ககூட வாதாட எனக்குப் பொறுமையில்லை” எனக் கூறுகின்றார்.

மேலும் அவமரியாதை செய்ய முதல் அப்பிடி ஒரு அவமரியாதை உங்களுக்கு வராதா என நீங்கள் யோசிக்கவில்லை, மற்றவங்க அவமானப்படுறாங்க, ஆனால் நீங்க அதை தட்டி விடுறீங்க” எனக் கோபத்துடன் கூறி கண்டிக்கிறார். இவ்வாறு இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….

Begam