திமுக கோட்டையில் விஜய் நடத்தும் “வாரிசு” வேட்டை… தவெக-வுக்கு தாவும் கலைஞர் பேத்தி… மேயர் நாற்காலிக்கு விஜய் போட்ட ஸ்கெட்ச்… ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்…!

Spread the love

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக அதன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், திமுகவின் மூத்த நிர்வாகியான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு அவரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளார். தனது ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தந்தை அழகிரி எவ்வளவோ வற்புறுத்தியும், சித்தப்பா ஸ்டாலின் அதனைக் கண்டுகொள்ளாததே கயல்விழியின் இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது கலைஞர் குடும்பத்திலிருந்து ஒருவர் தவெகவில் இணைய உறுதியாகியிருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், மு.க. அழகிரி இதுவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் முயன்ற நிலையில், அழகிரி கொடுத்த கடுமையான பேட்டிகள் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தனது ஆதரவாளர்களையாவது கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அழகிரியின் கோரிக்கைக்கு திமுக தலைமை தொடர்ந்து பிடிகொடுக்காமல் தவிர்த்து வந்த நிலையில், தற்போது கயல்விழி தவெகவின் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அழகிரியின் கோட்டையான மதுரையின் மேயர் வாய்ப்பைக் கேட்டுள்ளார். இதற்கு தவெக தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தவெகவில் புதிய அரசியல் கணக்குகள் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலம் முதலே கட்சிக்காகப் உழைத்த நிர்வாகிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற தவெக தலைமையின் நிலைப்பாட்டால் கயல்விழிக்கு பதவி தொடர்பான உறுதியான வாக்குறுதிகள் எதுவும் இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. குறிப்பாக, மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளரான மருதுபாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஏற்கனவே தீவிரமாகப் போட்டியிட்டு வருகின்றனர். கயல்விழி போன்ற அரசியல் பின்னணி கொண்ட நபர் தவெகவில் இணைவது திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்றாலும், கட்சியில் இணையும் முன்பே பதவி நிபந்தனைகள் விதிக்கப்படுவது குறித்து தவெக தலைமை மட்டத்தில் சில தயக்கங்களும் நிலவி வருகின்றன.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago