தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர். இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் தகுதியானவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 15 முதல் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்காத பலரும் தற்போது மகளை உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த 28 லட்சம் பேரின் மனுக்களை மட்டுமே அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதனால் ஆட்சியில் அலுவலகத்தில் மனு அளிப்பதில் பயன் இல்லை.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…