Categories: சினிமா

தயாரிப்பாளர்களின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் வெற்றி ரகசியம் இதுதான்…!

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ்  ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.

அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் அஜித் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.

கே எஸ் ரவிக்குமாரின் வெற்றி ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அது திட்டமிடல். ஒரு படத்தை இவ்வளவு நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என தயாரிப்பாளர் விரும்பினால் அதை எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடுவார். ஏனென்றால் கடன் வாங்கி முதலீடு செய்யும் தயாரிப்பாளரின் பணம் முக்கியமானது என நினைப்பவர்.

இப்படி இருந்ததால்தான் அவரை பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்துக்கு பணியாற்ற விரும்பி அழைத்தனர். ஆனால் அவரின் நேர்ம்றை பண்பே, அவருக்கு சில தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளது. அப்படி ஒரு படம்தான் லிங்கா திரைப்படம். அந்த படத்தை சொன்ன நாளுக்குள் எடுக்க வேண்டும்  என அவசர அவசரமாக எடுத்து அந்த படம் மோசமான தோல்வியைப் பெற்றது.

vinoth

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

10 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

11 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago