தமிழ் சினிமாவில் சிறந்த அடையாளத்தை பெற்றவர் இயக்குனர் கே பாக்யராஜ். இந்திய சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு திரை ஆளுமையாக அவர் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜனவரி 7ம் தேதி நடிகர் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளையும் நிறைவு செய்கிறார். அவரது பிறந்தநாள் விழா மற்றும் 50ம் ஆண்டு பொன்விழா இந்த இரண்டையும் கொண்டாடும் விதமாக வரும் ஜனவரி 7ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொள்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் கே பாக்யராஜ் அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிவப்பு மனிதன் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இந்த விழாவில் தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் மட்டுமின்றி இந்தி பட உலகைச் சேர்ந்த அனில்கபூர் உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…