செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த யுவராஜ் (52), சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தாம்பரம் பணிமனையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் கழுத்து வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்காக மருத்துவச் சான்றிதழ்களைக் கிளை மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் மனிதவள அதிகாரி ஸ்வர்ணலதா ஆகியோருக்கு அனுப்பி விடுப்புக் கோரியுள்ளார்.
ஆனால், இருவரும் யுவராஜின் விடுப்புக் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அவருக்குப் பணிக்கு வராததற்கான பதிவைப் (11C Absent) போட்டுள்ளனர். இதனால் ஊதியப் பிடித்தம் ஏற்பட்டதோடு, கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, யுவராஜ் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்கு ஒரு மரண வாக்குமூலத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதில், தனது மரணத்திற்கு கிளை மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ஸ்வர்ணலதா ஆகிய இரு அதிகாரிகள் தான் காரணம் என்று குறிப்பிட்டுவிட்டு, கூடுவாஞ்சேரி அருகே ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்துத் தாம்பரம் இருப்புப்பாதை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…