“என்னை பிளாக்மெயில் செய்ய வேண்டாம், முகத்தைப் பார்க்க மாட்டேன்”… சவுக்கு சங்கருக்கு நீதிபதி வேல்முருகன் கொடுத்த மரண அடி….!

Spread the love

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பில் நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதி, “என்னை ப்ளாக் மெயில் செய்ய முயற்சிக்க வேண்டாம், அது ஒருபோதும் பலிக்காது” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

தன்னுடைய 20 ஆண்டுகால நீதித்துறைப் பணியில் எந்தவொரு வழக்கிலிருந்தும் தான் பின்வாங்கியதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கிலிருந்தும் தான் விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். “நாங்கள் யாருடைய முகத்தையும் பார்ப்பதில்லை, ஆவணங்களை மட்டுமே பார்க்கிறோம்; என் மனசாட்சிக்கு உட்பட்டே நான் செயல்படுவேன்” என்று கூறிய அவர், நீதிமன்றத்திற்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், சட்டப்படியே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதிபடக் கூறினார்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டும் வகையில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகளை மீறி செயல்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கவோ அல்லது அழுத்தங்களை உருவாக்கவோ முயற்சிப்பது செல்லுபடியாகாது என்ற நீதிபதியின் இந்த வலுவான செய்தி தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago