தென்னிந்திய திரை உலகில் காதல் படத்தின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மணிஷர்மா உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஜோஷ்வா ஸ்ரீதர் 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டாகின.
அதன் பின்னர் அவர் கவனிக்கப்படும் இசையமைப்பாளர் ஆகி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஆனாலும் அவர் திடீரென்று காணாமல் போனார் . அவரின் அனுகுமுறையால்தான் அவர் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி ஜோதிடம் மற்றும் பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் ஜோஷ்வா குறித்து பேசிய இயக்குனர் விக்ரமன் “ஜோஷ்வா ஸ்ரீதர் ஒரு நல்ல இசையமைப்பாளர்தான். அவரிடம் திறமை இருக்கு. ஆனால் அவர் நடவடிக்கைகள் ரொம்ப மோசம். பாட்டு ரெடி பண்ணி ரெக்கார்டிங்குக்கு தியேட்டர் எல்லாம் புக் பண்ணிவிட்டு காத்திருந்தால் வரவே மாட்டார். போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார். அவரிடம் இருந்து பாடல்களை வாங்க படாத பாடு பட்டோம்.” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது விக்ரமனின் அந்த குற்றச்சாட்டுக்கு ஜோஷ்வா ஸ்ரீதர் “விக்ரமன் சார் சொல்லியிருப்பது பச்சைப் பொய். ஏனென்றால் நான் என் குருவாக நினைப்பது இளையராஜா சாரை. அதனால் நான் என்னால் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என நினைப்பேன். ஒன்று அவர் மறதியில் சொல்லி இருக்க வேண்டும் அல்லது என் மேல் உள்ள வன்மத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஒரே ஒருமுறைதான் என் ரெக்கார்டிங் கேன்சல் ஆனது. அதுவும் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஸ்டியோக் காரர்கள் கேன்சல் செய்ததால்தான். அதனால் என் மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டை நான் முழுக்க முழுக்க மறுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…