ரூ.3 கோடி வேலை மோசடி வழக்கு… முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு செப். 2-ல் சிக்கல்…. அதிமுகவுக்கு அடுத்த ஷாக்….!

Spread the love

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் விடுவிப்பு மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த முறைகேடு புகாரின் பேரில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உட்பட 8 பேர் மீது விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் இரு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தங்களை இவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கந்தகுமார், தற்போது அந்த விடுவிப்பு மனுவை அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி வழக்குகள் தொடர்பான குற்றச்சாட்டுப் பதிவை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மீதான இந்த ஊழல் மற்றும் மோசடி வழக்கில் விரைவில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட உள்ளதால், இவ்வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: இடைத்தேர்தல் முடிந்த கையோடு CM விஜய் எடுத்த அதிரடி முடிவு… அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முடிந்த கையோடு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகத்…

36 minutes ago

BREAKING: “சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?”… அரசுப் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய CM விஜய்… நெகிழ்ச்சி வீடியோ….!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'பெருந்தலைவர்…

52 minutes ago

பெற்றோர்களுக்கு பறந்த SMS…. “பிரியமுடன் ச. ஜோசப் விஜய்”….. காலையிலேயே குஷியான தமிழகம்…. 34 லட்சம் மாணவர்களுக்கு செம நியூஸ்….!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதையும், பள்ளி வருகைப் பதிவை…

60 minutes ago

கீர்த்தனாவுக்கு செக் வைத்த CM?…. பனையூர் வட்டாரத்தில் நிலவும் திடீர் பரபரப்பு…. கடைசி நேரத்தில் அதிரடி டுவிஸ்ட்…!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பதவி பறிக்கப்படலாம் என்று வெளியான ஊகங்களுக்கு மத்தியில், ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் இந்த விவகாரத்தில் ஒரு…

1 மணத்தியாலம் ago

BREAKING: அகன்றது வென்டிலேட்டர்…. பேசுறாரு… குணமடைந்த VS பாபு… மருத்துவமனை வெளியிட்ட அதிரடி அறிக்கை

மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக…

1 மணத்தியாலம் ago

வங்கி கடன் தள்ளுபடி… தமிழக அரசு அறிவித்தது…. காலையிலேயே குட் நியூஸ்….!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட நிலையிலும், நிலுவையில் உள்ள கடன்…

1 மணத்தியாலம் ago