Categories: சினிமா

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம்ரவி போட்ட கண்டிஷன்கள்… முக்கியமான Point ஐ பிடிச்சிட்டாரே…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தன் உழைப்பினால் உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி செய்பவராகவும் தனது கேரியரை ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் காமெடி கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து கமர்சியல் படங்களிலும் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிகளைத் தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிசியான நடிகர் ஆகிவிட்டார். தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். அடுத்ததாக SK 23 சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக SK 24 சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் SK 25 சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த SK 25 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக உறுதியாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம்ரவி பல கண்டிஷன்களை போட்டு இருக்கிறார். அந்த கண்டிஷனுக்கு ஒத்து வந்தால் தான் நடிக்க முடியும் என்றும் கூறி ஒப்புதல் வாங்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த ஜெயம் ரவி போட்ட கண்டிஷன்கள் என்னவென்றால் முதலில் கால்ஷீட் 20 முதல் 25 நாட்கள் மட்டும் தான். சம்பளம் 16 கோடி. படத்தில் எந்த ஒரு இடத்திலும் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவியை அடிப்பது போலவும் தாக்குதல் போலவும் காட்சிகள் இருக்கக் கூடாது மற்றும் ஜெயம் ரவியை இழிவுபடுத்தும் அசிங்கப்படுத்தும் காட்சிகளும் இருக்கக் கூடாது என்று கண்டிஷன் விதித்து தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறாராம். ஒரு வில்லனுக்கு அடையாளமே ஹீரோவிடம் அடிவாங்குவது தான். ஆனால் முக்கியமான பாயிண்டை ஜெயம்ரவி பிடித்திருக்கிறார். அதனால் இந்த கதை அம்சம் எப்படி அமையப்போகிறது என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

admin

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

12 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

21 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

22 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

28 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

35 minutes ago