Categories: INSPIRATION

ஹெட்லைட்டின் வடிவத்தை மட்டும் மாத்தி பிசினஸை எங்கேயொ கொண்டு போன ஜீப் நிறுவனம்! இது எப்படிப்பா சாத்தியம்?

ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல் முறையான தார் ரோடு இல்லாத மண் ரோடுகளில் கூட எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம். அதுமட்டுமல்லாமல் மேடான பகுதிகளில் பயணிப்பதற்கு மிகச் சிறந்த வாகனம் ஜீப்தான். இவ்வாறு மண் பாதையிலும் சீராக செல்லும் ஜீப் போன்ற வாகனங்களை SUV கார்கள் என்று அழைப்பார்கள்.

அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்டெல்லண்டிஸ் என்ற நிறுவனம்தான் ஜீப் வாகனத்தை தயாரித்து வருகிறது. 1945 ஆம் ஆண்டு முதல் ஜீப் வாகனத்தை தயாரித்து அதனை சந்தைக்குள் கொண்டு வந்தது அந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் பலருக்கும் ஜீப்பின் தனித்துவம் பிடித்துப்போக அதன் பின் உலகமெங்கும் அதன் மார்க்கெட் பெரிதளவில் வேலை செய்தது.

இந்த நிலையில் ஜீப் நிறுவனம் எப்படி அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்தது என்பது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் பரவி வருகிறது. அதாவது முதலில் ஜீப் வாகனத்தில் ஹெட்லைட்டை சதுர வடிவில்தான் வடிவமைத்து வந்தார்களாம். ஆனால் ஒரு கட்டத்தில் ஜீப்பின் மார்க்கெட் பெரிதளவில் சரிந்தது.

சரிந்துப்போன மார்க்கெட்டை திரும்ப உயர்த்த என்ன செய்யலாம் என்று ஜீப் நிறுவனம் யோசித்தது. ஏற்கனவே ஜீப்பை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டு அதனை சரிபடுத்தலாம் என அந்நிறுவனம் நினைத்தது. ஆனால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வேறு மாதிரி யோசித்தாராம்.

அதாவது வாடிக்கையாளர்களிடம் ஜீப்பில் என்ன குறை இருக்கிறது என்று கேட்பதற்குப் பதிலாக ஜீப்பை ஓட்டும்போது எப்படி உணர்கிறீர்கள் என கேட்டாராம். அதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் மலைப்பாதைகளில் ஓட்டும்போது குதிரையில் சவாரி செய்வது போல் இருக்கிறது என கூறினார்களாம். அந்த பதிலை வைத்துக்கொண்டு ஜீப் நிறுவனம் ஜீப்பின் ஹெட்லைட்டை குதிரைக்கு இருக்கும் கண்களைப் போலவே வட்ட வடிவில் மாற்றினார்களாம். அதன் பிறகு ஜீப் மார்க்கெட் வேற லெவலுக்குச் சென்றதாம்.

Arun

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

12 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

13 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

14 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

14 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

15 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

16 hours ago