Categories: சினிமா

இரண்டே நாளில் மாபெரும் வசூல் சாதனை படைத்த ஜவான்… மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?.. அட்லீ போட்ட போஸ்ட்..!!

Spread the love

பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் திரைப்படம் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. கடந்த ஜனவரி மாதம் சாருக்கான் நடிப்பில் வெளியான படம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூல் செய்தது. அதனால் ஜவான் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. பின்னர் முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்த ஜவான் மொத்தம் 130 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளில் 110 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டே நாட்களில் 240 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் ஜவான் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஜவான் திரைப்படம் மூன்று நாளில் 350 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 350 கோடி வரை வசூலித்துள்ள ஜவான் பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் புதிய சாதனை படைத்துள்ளது. அதனைப் போலவே இந்தி வர்ஷனில் மட்டுமே ஒரே நாளில் 70 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் ஜவான் தான் எனவும் கூறப்படுகிறது.

 

Nanthini

Recent Posts

“கைக்கூலிகளை வச்சு நாடகம் ஆடாதீங்க”… அதிமுக தொண்டரின் மரணத்திற்கு பின்னணியில் தவெக… பொங்கி எழுந்த ஆர்.பி.உதயகுமார்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…

1 minute ago

பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை சுவரில் மோதி கொன்ற கொடூரன்..! தாயை திருமணம் செய்ய குழந்தை தடையாக இருந்ததால் வெறிச்செயல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…

4 minutes ago

தவெகவுக்கு ஆதரவு…. திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… முதல்வர் விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ போட்ட குண்டு….புதிய பரபரப்பு….!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…

10 minutes ago

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

16 minutes ago

பாஜகவில் விரிசல்..? அண்ணாமலையின் புதிய கட்சி திட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நபர் யார்..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் கூட்டணி…!!

பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…

17 minutes ago

ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…

37 minutes ago