மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஐடி ஊழியர் ஒருவர், வழக்கமான கார்ப்பரேட் ‘Day in My Life’ ரீல்ஸ்களுக்கு மாற்றாகத் தனது உண்மையான வேலை நேரத்தைப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
பொதுவாகக் கார்ப்பரேட் ஊழியர்கள் வெளியிடும் ‘Day in My Life’ வீடியோக்களில் அலுவலகத்தின் ஆடம்பர வசதிகள், உணவு இடைவேளைகள் மற்றும் விளையாட்டு அம்சங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படும். ஆனால், மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில், எவ்வித பொழுதுபோக்கும் இன்றி காலை 8:55 மணி முதல் மாலை 6:38 மணி வரை தொடர்ந்து கணினித் திரையின் முன் அமர்ந்து தீவிரமாகப் பணியாற்றுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது.
@tQuietEngineer என்ற எக்ஸ் பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “0% லைஃப்ஸ்டைல், 100% ஸ்கிரீன் டைம்! சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் வேலையின் உண்மையான முகத்தைக் காட்டியவருக்குப் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைச் சிலர் நிஜமான ஐடி வாழ்க்கை என வரவேற்றுள்ள நிலையில், சிலர் இது வீடியோவிற்காகத் தொகுக்கப்பட்டது என விவாதித்து வருகின்றனர். எவ்வாறாயினும், கார்ப்பரேட் ரீல்ஸ்களின் மாயையை உடைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…