நடிகர் சூர்யா – ஜோதிகாவின் மகளா இவர்?… என்னமா டான்ஸ் ஆடுறாங்க!… தீயாய் பரவும் வீடியோ இதோ!…

By Begam

Published on:

நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகள் தியா நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன்பு பூவெல்லாம்  கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கிடையே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

   

இரு வீட்டார் சம்பந்தத்துடன் இருவரும் 2007ல் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது  மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு தியா, தேவ் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தங்களது குழந்தைகளை அவ்வளவாக வெளியில் காட்டியது கிடையாது.

அவர்களின் புகைப்படங்களையும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் கிடையாது. இறுதியாக நடிகர் சூர்யா தேசிய விருது வாங்கியபோது தனது குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகளான தியாவின் அழகான நடன வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகளா இது? என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தற்பொழுது அதிக அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ …..

 

View this post on Instagram

 

A post shared by Diya ???? (@diyasuriya_fans)