‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.
கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும்.
தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. குறிப்பாக பா.இரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர ‘நெஞ்சமெல்லாம் காதல்’ என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் அசோக் செல்வன்.
நடிகர் அசோக் செல்வனுக்கு தற்பொழுது 33 வயதாகிறது. இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவ்வப்பொழுது இவரது திருமணம் குறித்த வதந்திகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் மணமுடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த மணவீட்டார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பாப்போம் இத்தகவல் உண்மையா என்பதை.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…
சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…