‘படையப்பா’ திரைப்படத்தில் நடிகை சௌந்தர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான நடிகை இவர்தானா?…

‘படையப்பா’ திரைப்படத்தில் நடிகை சௌந்தர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான நடிகை இவர்தானா?…

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘படையப்பா’. இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும் நடிகர் ரஜினிக்கு நிகராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை இத்திரைப்படம் பிடித்துள்ளது என்றே கூறலாம். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், ஜோடியாக சௌந்தர்யாவும் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்களது நடிப்புத் திறமையினை அபாரமாக வெளிப்படுத்தி இருந்தனர்.

‘படையப்பா’ திரைப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று கதாநாயகி சௌந்தர்யா. இந்நிலையில் நடிகை சௌந்தர்யா நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை. நடிகை மீனா தான்.

ஒரு சில காரணங்களால் இப்படத்தில் மீனாவால் நடிக்க முடியாமல் போனதால் நடிகை சௌந்தர்யா இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam