#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஒரு பின்னணி நடிகராக தனது கேரியரை சினிமாவில் ஆரம்பித்து பிறகு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது உழைப்பு விடாமுயற்சியின் மூலம் நடிகராக உயர்ந்தவர். நடிகர் ஆன பின்பு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக ஆனவர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியை அனைவருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் மிகவும் எளிமையானவர் அனைவரிடம் சாதாரணமாக பழகக் கூடியவர். நம்ம வீட்டு பையன் என்பதைப் போலவே மக்கள் மனதில் விஜய் சேதுபதி இடம் பிடித்திருக்கிறார். இப்போது அதன் வரிசையில் அடுத்ததாக ஒரு நடிகர் வந்திருக்கிறார்.
அவர்தான் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். ஆனாலும் அவருக்கு சரியான கதைக்களம் எதுவுமே அமையவில்லை. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மணிகண்டன் பிரபலமானார். அந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதற்கு அடுத்ததாக குட் நைட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் மணிகண்டன். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார் மணிகண்டன். இந்நிலையில் இவரை பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் மணிகண்டன் மற்ற நடிகரை போல் இல்லாமல் சாதாரணமாக மைக்கில் மாஸ்க் போட்டுவிட்டு செல்கிறாராம் வருகிறாராம்.
அது மட்டுமல்லாமல் குட் நைட் லவ்வர் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு அவருக்கு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த போதும் சினிமாவில் தன்னை கை தூக்கி விட்ட இயக்குனர்களின் படங்களில் நடித்து முடித்து தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் நடிப்பேன் என்று கூறி இருக்கிறாராம். இதன் மூலம் இவர் தான் தமிழ் சினிமாவின் சின்ன விஜய் சேதுபதி என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர்…
தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த 'வில்லிவாக்கம்…
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில்…
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி…
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, தன்னைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அவரது கணவனின்…
உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தகாத நட்பின் காரணமாக, தனது கணவரைக் கூலிப்படையை ஏவிக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற…