கஜானா காலியா? இல்ல ரூ.15,000 கோடி வந்துருச்சா?…. தவெக அரசு வைத்த ‘செக்’… சட்டப்பேரவையில் உச்சகட்ட மோதல்….!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து 100 நாட்களை எட்டவுள்ள சூழலில், மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது பேசிய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், கடந்த 65 முதல் 75 நாட்களில் துறை சார்ந்த சீர்திருத்தங்கள் மூலம் அரசு கருவூலத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் வந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிதி வளர்ச்சி முழு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், விவாதத்தின் அடுத்த நாளில் முன்னாள் நிதியமைச்சரும் திமுக உறுப்பினருமான தங்கம் தென்னரசு இது குறித்து கேள்வி எழுப்பினார். வெறும் 3 மாத காலத்தில் அரசு கஜானாவிற்கு ரூ.15,000 கோடி எவ்வாறு சாத்தியமானது, எந்தெந்த துறைகள் மற்றும் வழிகளின் மூலமாக இந்த வருவாய் ஈட்டப்பட்டது என்று அவர் வரிசையாக வினாக்களை அடுக்கி விளக்கமளிக்குமாறு கோரினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், மதுவிலக்கு மற்றும் கலால் துறை மூலம் மட்டும் ரூ.1,500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறினார். இதில் சிறப்புரிமைக் கட்டணம், பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் மற்றும் புதிய உரிமக் கட்டணங்கள் அடங்கும் எனக் குறிப்பிட்டவர், மோட்டார் வாகன வரிகளை மறுவரையறை செய்ததன் மூலமும், ஃபேன்சி எண்களுக்கான கட்டணத்தை மாற்றியமைத்ததன் மூலமும் ரூ.750 கோடி ஈட்டப்பட்டுள்ளதாக விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ.5,000 கோடி வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த நிதி தற்போது வரத் தொடங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

நேற்றைய விவாதத்தில் ரூ.15,000 கோடி அரசு கருவூலத்திற்கு “வந்துவிட்டது” என்று திட்டவட்டமாகக் கூறிய நிதியமைச்சர், இன்று “எதிர்பார்க்கப்படும் வருவாய்” என்று சொற்களை மாற்றிப் பேசியது பேரவையில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த முரண்பாடான பதிலைக் கண்டித்து எதிர்க்கட்சியான திமுகவினர் அவையில் குரல் எழுப்பியதால் காரசாரமான விவாதம் உருவானது. ஏற்கெனவே கிடைத்த வருவாய் எது, இனி வரப்போகும் கணக்கு எது என்பதில் நிலவிய தெளிவின்மை தவெக அரசின் நிதிநிலை கூற்றுகள் குறித்த புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

2 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

8 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

24 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

31 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

43 minutes ago