52 வயதில் இப்படியா?…. மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார்.

   

அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1985 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது வரை அதே இளமையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இதனிடையே ரம்யா கிருஷ்ணன் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக மற்றொரு நடன நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்க உள்ளார். இந்நிலையில் 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும்படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ramya Krishnan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meramyakrishnan)

author avatar
Nanthini