Categories: சினிமா

நடிகர் பிரபுவின் மகளுக்கு திருமணம்.. பிரபல இயக்குனரை காதலித்து கரம்பிடிக்கிறார்..

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா தம்பதியின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ‘சங்கிலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரபுவிற்கு  3 பிள்ளைகள் உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு 2012 இல் வெளியான ‘கும்கி’ திரைப்படம் வழியாக திரையுலகில் அறிமுகமானார். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

 

2009 இல் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு குணால் என்பவரிடம் திருமணம் நடைபெற்றது. குணால் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.  நடிகர் பிரபுவுக்கு மற்றொரு மகளும் உள்ளார். இவர் ஒரு காஸ்டியூம் டிசைனர். இவருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தான் திருமணம் நடைபெற உள்ளதாம். இருவரும் ஒரே ஃபீல்டில் இருப்பதால் இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.

டிசம்பர் 25 ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களும் , பிரபலங்களும் தங்களது  வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

“என்னை விடுங்க சார்…” 16 வயது மாணவிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஊழியர்…. பள்ளியில் வைத்து அத்துமீறல்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

4 மணத்தியாலங்கள் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

5 மணத்தியாலங்கள் ago

“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

5 மணத்தியாலங்கள் ago