ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தான், தற்போது ஈரானின் அதிரடி நடவடிக்கைகளால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களுக்கு அஞ்சப்போவதில்லை என ஈரான் அதிபர் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவிடம் இருந்து ஈரான் சில முக்கிய உத்தரவாதங்களைக் கோரி வருகிறது.
இந்த போர்ச் சூழலால் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் கரன்சியில் 458.4 ரூபாயாகவும் (இந்திய மதிப்பில் ₹152.6), டீசல் விலை லிட்டருக்கு 520.35 ரூபாயாகவும் (இந்திய மதிப்பில் ₹173.23) அதிரடியாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே பொருளாதாரச் சரிவில் இருந்த பாகிஸ்தான் மக்கள் கடும் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
பாகிஸ்தானுக்குத் தேவையான கச்சா எண்ணெய் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கப்பல்கள் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வர வேண்டும். ஆனால், ஈரான் இந்த கடல் பகுதியை மூடியுள்ளதால், பாகிஸ்தானுக்குக் கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தாலும், ஈரான் அதன் மீது செலுத்தியுள்ள இந்த ‘பொருளாதார அடி’ அந்த நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை மிரட்டி வரும் நிலையில், வருங்காலத்தில் தங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்ற எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கினால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்று ஈரான் கறாராகக் கூறிவிட்டது. வல்லரசு நாடுகளின் இந்த மோதலால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் ஊசலாடி வரும் நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த எரிபொருள் விலை உயர்வு பெரும் இடியாக இறங்கியுள்ளது.
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…