ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றமானது தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் மிக முக்கியமான ஆதாரமான குடிநீர் விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தங்களின் குடிநீர் தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலாக கடல்நீரை குடிநீராக்கும் (Desalination plants) கட்டமைப்புகளையே நம்பியுள்ளன. ஒருவேளை ஈரான் இந்த ஆலைகளைக் குறிவைத்துத் தாக்கினால், அந்த நாடுகளில் மக்கள் வாழ முடியாத மிக மோசமான சூழல் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருக்கும் சவுதி மற்றும் அமீரகத்தில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ளதால், ஈரான் தனது தற்காப்பிற்காக இந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பை ஏற்படுத்த ஈரான் மின் நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இறுதி ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும். ஏற்கனவே அமீரகத்தின் ஃபுஜைராவில் உள்ள மின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், குவைத்தில் ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதும் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன.
புள்ளிவிவரங்களின்படி, சவுதி அரேபியாவின் 70 சதவீத மக்களும், கத்தாரின் 99 சதவீத மக்களும், அமீரகம் மற்றும் குவைத்தின் 90 சதவீத மக்களும் இந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையே சார்ந்துள்ளனர். இயற்கை ஆறுகள் இல்லாத இந்தப் பாலைவன நாடுகளில், ஒரு சில நாட்கள் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முடங்கினாலும் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகமும் சீர்குலைந்துவிடும். போர்ச் சூழலில் மற்ற நாடுகளிலிருந்து உடனடியாகத் தண்ணீரை இறக்குமதி செய்வதும் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும்.
சர்வதேச சட்டங்களின்படி இத்தகைய குடிநீர் ஆதாரங்களைத் தாக்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், போர் தீவிரமடையும் போது ஈரான் எந்த எல்லைக்கும் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1991-ல் ஈராக் படைகள் சவுதியின் நீர் சுத்திகரிப்பு ஆலைகளைச் சிதைக்க எண்ணெயைக் கடலில் கலந்ததைப் போன்ற உத்திகளை ஈரானும் கையாள வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதியில் நிலவும் போர் பதற்றம் என்பது வெறும் அரசியல் மோதல் மட்டுமல்லாமல், பல கோடி மக்களின் வாழ்வாதாரமான குடிநீருக்கான அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…