அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடுத்த ஷாக்… ஆரக்கிள் அலுவலகத்திற்கு குறி… பெரும் பதற்றத்தில் உலக நாடுகள்..!!

Spread the love

ஈரானின் இரண்டு மிகப்பெரிய எஃகு ஆலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய இலக்குகளைக் குறிவைத்து இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் குறிப்பாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களான துபாயில் உள்ள ‘ஆரக்கிள்’ (Oracle) மற்றும் பஹ்ரைனில் உள்ள ‘அமேசான்’ (Amazon) ஆகிய நிறுவனங்களின் தரவு மையங்கள் (Data Centres) குறிவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, அபுதாபியில் உள்ள அமெரிக்க எஃகு தொழிற்சாலைகள், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க அலுமினிய தொழிற்சாலைகள் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் ஆயுதத் தொழிற்சாலைகள் ஆகியவையும் ஈரானின் இலக்குகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஈரானிய எஃகுத் தொழிற்சாலைகள் மீதான தாக்குதலுக்கு இது ஒரு நேரடிப் பதிலடி என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் சியோனிச ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் ஈரானிய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

46 minutes ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

49 minutes ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

53 minutes ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

1 மணத்தியாலம் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

2 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

2 மணத்தியாலங்கள் ago