அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
இதனிடையே செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்ததே அக்கட்சியை NDA கூட்டணியில் இணைப்பதற்கு தான் என்ற திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, யார் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பதில் டெல்லி தலைவர்கள் சரியாக இருப்பார்கள் என சூசகமாக பதில் அளித்துள்ளார். இதனால் விஜய் பாஜகவில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…