இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) பெண்களின் நிதி சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் ‘பிமா லட்சுமி’ என்ற பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 18 முதல் 50 வயதுடைய பெண்கள் இதில் இணைந்து, காப்பீடு, முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய மூன்று நன்மைகளையும் ஒரே நேரத்தில் பெற முடியும். மாதந்தோறும் சுமார் 4,400 ரூபாய் சேமிப்பதன் மூலம், பாலிசி கால முடிவில் 16 லட்சம் ரூபாய் வரையிலான பெரும் தொகையை ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளை முதிர்வு காலமாகக் கொண்ட இத்திட்டத்தில், 7 முதல் 15 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளதுடன், அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை ‘சர்வைவல் பெனிபிட்’ ஆகவும் பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் பெண்களின் கல்வி மற்றும் ஓய்வுக்காலத் தேவைகளுக்குப் பெரும் துணையாக இருக்கும் என எல்ஐசி தெரிவித்துள்ளது. பாலிசிதாரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதியும், தீவிர நோய்களுக்கான கூடுதல் காப்பீட்டுப் பாதுகாப்பும் இதில் உண்டு. உதாரணமாக, 40 வயதில் இத்திட்டத்தைத் தொடங்குபவர் 15 ஆண்டுகளுக்குப் பிரீமியம் செலுத்தினால், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகையுடன் சேர்த்துக் கூடுதல் பலன்களையும் பெறலாம். இதற்கான பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உண்டு என்பதால், பாதுகாப்பான மற்றும் லாபகரமான சேமிப்பைத் தேடும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பெங்களூருவில் உள்ள கூகுளின் 'அனந்த்' அலுவலகத்தை அர்பிதா என்ற இளம்பெண் டிஜிட்டல் முறையில் சுற்றிக் காட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில்…
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் ரவீந்திர குல்மேத்தே என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கூலிப்படையை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ள அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில்,…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள குமானபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லபாரி பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த மூன்று மாடி…