தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை தீவிரமாக விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி ஐபிஎஸ் தலைமையில் 4 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள இவ்வழக்கில், முழுமையான உண்மைத்தன்மையைக் கண்டறியும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவில் சென்னை மேற்கு மண்டல சட்ட-ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல், ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி மற்றும் குழந்தைகள்-பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு சென்னை துணை ஆணையர் கீதாஞ்சலி ஆகிய உயர்மட்ட பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இக்குழுவிற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருமாறு சட்டம்-ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் முதன்மை குற்றவாளியான தொழிலதிபர் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மற்றும் மற்றொரு உதவியாளரான கணேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு துரிதமாக நீதி கிடைக்கும் வகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், வழக்கை மூடிமறைக்க தொழிலதிபரிடம் இருந்து பெரும் தொகை லஞ்சமாக பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் அருண், முன்னாள் கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகிய மூன்று முக்கிய அதிகாரிகள் அதிரடியாக கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025-இல் பென் ட்ரைவ் ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 7 மாதங்கள் விசாரணை நடத்திய காவல்துறை, போதிய ஆதாரமில்லை எனக்கூறி வழக்கை முடிக்க நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, புதிய காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின் பேரில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டார். தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் மூலம் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…