லண்டனில் இருந்து வந்ததும் இறக்கிய “ஜெயலலிதா பாணி” ஸ்கெட்ச்… முதல்வர் விஜய்யின் அதிரடியால் கலக்கத்தில் அமைச்சர்கள்… ரகசிய “பிளாக் லிஸ்ட்” கசிந்தது…..!

Spread the love

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய உடனேயே, தமிழக முதல்வர் விஜய் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆய்வுகளின் போதும், உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையிலும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள முதல்வர் விஜய், தனது அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளுடன் கூட்டணி மற்றும் ஆதரவுத் தலைவர்களும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆரம்பம் முதலே ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், “சிறு சர்ச்சை அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினாலும் எவர் என்றும் பார்க்காமல் பதவி பறிக்கப்படும்” எனத் தொடக்கத்திலேயே எச்சரித்திருந்தார்.

இருப்பினும், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு போன்ற விவகாரங்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்வில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் நீதிமன்றம் தொடர்பான சர்ச்சைகள் முதல்வர் விஜய்யை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு அமைச்சரின் தனிப்பட்ட செயல்பாடுகள் மற்றும் சந்திப்புகள் குறித்த உளவுத்துறை அறிக்கையை முதல்வர் விஜய் பெற்றுள்ளார். தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு அமைதி காக்கும் முதல்வர், தேர்தல் முடிவடைந்த கையோடு ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கத் திட்டமிட்டுள்ளார். இதில் சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும், சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டு புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Nanthini

Recent Posts

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

12 minutes ago

திடீரென கதவைத் திறந்த கணவன்… கள்ளகாதலனுடன் அந்த கோலத்தில் இருந்த மனைவி…. அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி… இறுதியில் நடந்த அதிர்ச்சி சமபவம்…!

திருமண உறவின் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள், பல நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கும் குடும்பப் பிரிவுகளுக்கும் வழிவகுக்கின்றன. அந்த வகையில்,…

57 minutes ago

அக்டோபர் மாதம் சென்னை வருகிறார் ராகுல் காந்தி… தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு…. விஜய்க்கு மறைமுக பிரஷர்….!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வரும் அக்டோபர் மாதம் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.…

1 மணத்தியாலம் ago

டம்மி போஸ்டிங் கொடுத்து ஸ்கெட்ச் போட்ட அரசு… அக்டோபர் 1-ல் சார்ஜ் எடுக்கும் ராதாகிருஷ்ணன்…. அடுத்து என்ன நடக்கப்போகிறது?…. காத்திருக்கும் டுவிஸ்ட்….!

பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை,…

1 மணத்தியாலம் ago