உங்க வாக்காளர் அடையாள அட்டையில் “இனிஷியல்” இல்லையா..? SIR விண்ணப்பிப்பதில் வந்தது புதிய சிக்கல்..!!

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதில் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். அதாவது ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டும் அதில் லாகின் செய்ய முடிகிறது. செல்போன் எண் இல்லாதவர்கள் புதிதாக மனு செய்ய வேண்டியுள்ளது .பின்னர் படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் OTP அங்கீகாரம் கொடுக்க வேண்டி உள்ளது.

ஆனால் அதில் பெரும்பாலானவர்களுக்கு பெயர் சரியாக இல்லை என்றே வருகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில்  உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவருடைய பெயருடன் இனிசியல் அல்லது தந்தை பெயர் முழுமையாக சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய இனிஷியல் சேர்க்கப்பட்டிருக்காது. அப்பா பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும்.

இந்த பிரச்சினை தமிழக மட்டுமல்லாமல் தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது. வட மாநிலங்களில் ஆதார் இன்ஷியல் போட மாட்டார்கள் .தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும் அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அது போல தான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும். எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

2 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

4 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

10 minutes ago

இவ்வளவு வெறியா?!… “இதுக்கெல்லாமா அடிச்சுப்பாங்க?!”… நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட அண்டை வீட்டார்… பதைபதைக்கும் சிசிடிவி…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…

11 minutes ago

“திருச்சி கிழக்கில் திரிஷாவா? ஜான் ஆரோக்கியசாமியா?”…. அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட பிளான்…..!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…

15 minutes ago

சைக்கோவா இவன்!… “என் பொண்டாட்டி அங்க பேசக்கூடாது!”… நந்தி ஹில்ஸ் மர்மம்… பாசம் ஒரு குடும்பத்தையே அழிச்சிருச்சா?… மாப்ள போட்ட கொடூர ஸ்கெட்ச்…!!

பெங்களூருவில் தனது மனைவி குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பழகுவதை வெறுத்த வாடகை கார் ஓட்டுநர் இந்தூசேகர், அவரது மனைவி சுனிதா உட்பட…

19 minutes ago