மலையாளத்தில் நிலயும் நிஜமும், நீஹாரம் பெய்த ராவில் உள்ளிட்ட குறும்படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ஆஷிகா அசோகன். மிஸ்ஸிங் கேர்ள் சான்றிதழ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ஜஸ்டிஸ் பாஃர் ஜெனி என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆஷிகா அசோகன் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் ஆஷிகா அசோகன் கூறியதாவது, என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் பல பதிவுகளை போடுவேன். அப்படி ஒரு நாள் இரவு 9:30 மணிக்கு நான் பார்த்தபோது ஒரு அக்கவுண்டில் இருந்து ஒருவன் என் புகைப்படத்தை வைத்து சுய இன்பம் செய்து என் அக்கவுண்டை டேக் செய்தான். அந்த கணக்கை விசாரித்த போது அவனுக்கு 15 வயசுதான் ஆகிறது. இதை வைத்து அவன் சந்தோஷம் என்று நினைக்கிறான்.
நான் மெசேஜ் செய்த போது அந்த பையன் பயந்துவிட்டான். சைபர் கிரைமில் சொல்லி விசாரித்தபோது அவன் நல்ல வசதி உள்ள குடும்பத்தை சேர்ந்தவன். அம்மா டாக்டர் அப்பா டீச்சர். அதனால் இதை எப்படி அவர்களுக்கு வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இப்பவே என் போட்டோவை வைத்து இப்படி பண்றவன் பெரியவன் ஆனால் என்ன செய்வான் என்று பயமாக தான் இருக்கிறது. பக்குவம் இல்லாத இந்த வயசில் நிறைய தவறான விஷயங்களை பார்க்கிறான் என்று ஆஷிகா அசோகன் அந்த நேர்காணலில் வருத்தமாக கூறியிருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…
கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…