உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள ‘கோவா கார்டன்’ அடுக்குமாடி குடியிருப்பில், பார்க்கிங் தகராறு தொடர்பாகக் காவலாளி மீது தார் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பின் தடைசெய்யப்பட்ட பகுதியில் தார் காரை நிறுத்த முயன்றதைச் செக்யூரிட்டி தர்மேந்திர யாதவ் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் முதலில் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், தனது நண்பர்களையும் மைத்துனரையும் அழைத்து வந்து காவலாளி தர்மேந்திராவை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, இடுப்பில் துப்பாக்கியைச் செருகிக் கொண்டு அவரை மிரட்டியதுடன், பலவந்தமாக காரில் ஏற்ற முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாதிக்கப்பட்ட காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…