நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்திய ‘ஜென் Z’ இளைஞர்கள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர் பிலால் ஹசன், இந்தியாவில் இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காக அரசை எதிர்த்து தைரியமாகக் கேள்வி கேட்பதாகப் பாராட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானில் ஒரு தட்டு பிரியாணி கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்றும், கேள்வி கேட்பவர்களைக் காணாமல் ஆக்கிவிடுவார்கள் என்றும் ஒப்பீட்டுடன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியப் போராட்டத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்ததாக எழுந்த விமர்சனத்திற்கு, “எங்கள் சொந்த நாட்டை நடத்தவே பணமில்லை, இதில் இந்திய மாணவர்களுக்கு எப்படி நிதி கொடுக்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பலமே சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்கள் ஒன்றுபடுவதுதான் என்றும், ஆனால் பாகிஸ்தானில் பஞ்சாபி, பஷ்தூன், சன்னி, ஷியா எனப் பிரிந்திருப்பதால் மக்களால் ஒன்றுபட முடிவதில்லை என்றும் அந்நாட்டு இளைஞர்கள் கூறியுள்ளனர். இந்திய இளைஞர்களின் இந்த ஒற்றுமையையும் துணிச்சலையும் பாகிஸ்தான் நெட்டிசன்கள் பரவலாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்திய இளைஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தான் மட்டுமின்றி பிற அண்டை நாட்டு இளைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குக் காரணமாக இருந்த இளைஞர்கள், “உங்கள் இலக்கை அடையும் வரை பின்வாங்காதீர்கள்” என இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல, நேபாளத்தின் காத்மாண்டுவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர்கள், இந்திய இளைஞர்களின் கொந்தளிப்பு முற்றிலும் நியாயமானது என்றும், இதைக் சாதாரண விஷயமாகக் கடந்து போக முடியாது என்றும் கூறி ஆதரவளித்துள்ளனர்.
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…