Categories: சினிமா

வாழை படத்துல அந்த சீன்ல வரது நான் தான்… 2 காலும் போய்டுச்சு… விபத்தில் தப்பிய பெண் உருக்கம்…

Spread the love

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் தான் வாழை. இத்திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாழை திரைப்படத்தை தன் சிறுவயது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

திரை பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் பொதுமக்கள் என அனைவரும் இந்த படத்தை இந்த ஆண்டிற்கான சிறந்த படம் இதுவாக தான் இருக்கும் என்ற அளவுக்கு புகழ்ந்து வருகின்றனர். அப்படி இந்த படம் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் நெஞ்சை பிழியும் வகையில் இருக்கின்றது. அப்படி வாழை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனதை நொறுங்க செய்த ஒரு காட்சி என்றால் அது லாரி கவிழும் கோர விபத்து காட்சி தான். அந்த கோர விபத்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த உயிர் பிழைத்த ஒரு பெண்மணி தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், அந்த டைம்ல எல்லாரும் நாங்க காய் செமக்க போவோம். ஃபுல்லா இளவட்ட பயலுக எல்லாருமே வருவாங்க. எங்களுக்கு பொழப்பே அதுதான். 19 20 21 வயசு பசங்கலும் தான் வருவாங்க. அந்த கூலி உயர்வு காட்டுனது படத்துல எல்லாமே உண்மைதான். நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டு வாழ தார சுமந்துக்கிட்டு வருவோம். ஒரு கிலோ மீட்டர் ரெண்டு கிலோ மீட்டர் வயலுக்குள்ள உள்ள இருந்து சகதியில் வரப்புல எல்லாம் நடந்து கொண்டு வரணும். அதனால நாங்க கூட்டி கேட்டோம் நாங்க கடைசியா நாங்க வாழத் தர சுமந்துவர கூட்டி கேட்கும் போது எங்களோட சம்பளம் ஒன்னேகால் ரூபா தான்.அப்போதான் அந்த ஆக்சிடென்ட் நடந்துருச்சு. படத்தை பார்க்கும் போது என் கண்ணு கலங்குது அப்படியே நடந்ததை கண்ணு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கு என்று கூறியிருக்கிறார் அந்த பெண்மணி.

வாழை படத்துல வர்ற காட்சிகள் எல்லாமே உண்மைதான். அந்த லாரி கவுந்த விபத்துல நானும் இருந்தேன். படத்தில் காட்டினபடியே டிரைவரும் ஒரு நிமிஷம் கண் அசந்துட்டான். கண் அசந்து லாரிய கொண்டு வயல்ல போய் கவுத்துட்டாங்க. அதுல நிறைய பேரு இறந்து போயிட்டாங்க. நான் கீழ விழுந்து கிடந்தேன் என்னோட பாடி வெளில இருந்தது கால் மட்டும் லாரிக்கு கீழ சிக்கனதுனால ரெண்டு காலுமே போச்சு. மூணு மாசம் சுயநினைவு இல்லாம இருந்தேன். அதுல ஒரு பையன் கூட எல்லாரையும் காப்பாத்திட்டு கடைசில அவனும் செத்துப் போயிட்டான்.

ஃபர்ஸ்ட் முதல் தடவை லாரி ஒரு பக்கமா சரிஞ்சு கிடந்தது. அப்படி இருந்திருந்தால் கூட நிறைய பேரை காப்பாற்றி இருக்கலாம். ஆனா ரெண்டாவது முறையா தலைக்குப்புற சாஞ்ச பிறகு தான் நிறைய பேரு செத்து போயிட்டாங்க. இந்த சம்பவம் நடந்து 25 வருஷத்துக்கு மேல ஆச்சு. மாரி செல்வராஜ் அக்காவும் அதுல இறந்துட்டாங்க. இப்போ இரண்டு காலும் போச்சு நான் ஃபுல்லா வீட்டிலேயே தான் முடங்கி கிடக்கிறேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார் விபத்தில் சிக்கி இரண்டு கால்களை இழந்த பெண்மணி.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

5 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

5 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

6 மணத்தியாலங்கள் ago