இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்சித் ராணா ஆகிய இருவரும் காயம் காரணமாக ஒட்டுமொத்த தொடரில் இருந்தே துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளனர். இதனால், அவர்களுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இருப்பினும், நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்படாமல் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சஞ்சு சாம்சனுடன் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால், அவரை ஆறுதல்படுத்தும் முயற்சியில் கம்பீர் ஈடுபட்டு வருவதாகவே கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்படுவது சஞ்சு சாம்சனை மனதளவில் பெரிதும் பாதிக்கக்கூடும் என்றும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பிடிவாதமாக சாம்சனை தவிர்ப்பது நியாயமற்றது என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த மாற்றங்களின் விளைவாக, தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஒரேயொரு வலதுகை பேட்ஸ்மேன் மட்டுமே இடம்பெற்றுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் என ஸ்ரேயாஸ் ஐயரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களுமே இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆவர். டி20 உலகக்கோப்பை தொடரிலேயே அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறினர். இந்தச் சூழலில், இங்கிலாந்து அணியின் வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷீத் போன்ற ஸ்பின்னர்கள் இந்த இடதுகை பேட்டிங் வரிசையை எளிதாகக் கட்டுப்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…