Categories: சினிமா

நான் காப்பி அடித்தேனா?… டேய் நான் உன்னை பயிற்றுவித்தேன்… காப்பியடித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இளையராஜா பதில்!

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதையடுத்து பல இணையச் சேனல்களில் இளையராஜா நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு நேர்காணலில் தான் மேற்கத்திய இசையின் ஜாம்பவான்களான மொசார்ட் மற்றும் பாஹ் போன்றவர்களின் இசையில் இருந்து காப்பி அடித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில் “நான் காப்பி அடித்துவிட்டதாக சொல்கிறார்கள். அதுவும் எப்போது? 50 ஆண்டுகள் கழித்து.

டேய் நான் உனக்கு உலகில் இப்படி எல்லாம் இசை இருக்கிறது. இதையெல்லாம் நீ கேட்கவேண்டும் என்பதற்காக நான் எடுத்துக் காட்டினேன். அதுவும் ஒரு நிமிடத்துக்கு… மீதி இசையை யார்  அந்த ஜாம்பவானா போட்டார்? நான் உனக்கு இப்படி எல்லாம் இசை இருக்கிறது என்று பயிற்றுவித்தேன். நான் சொலல்வில்லை என்றால் உனக்கு மொசார்ட், பாஹ் மற்றும் பீத்தோவான் பற்றி எல்லாம் தெரிந்திருக்குமா?.. உன் வாத்தியார் சொன்னாரா உனக்கு மொசார்ட் பற்றி. நான்தானே சொன்னேன்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

15 minutes ago

இபிஎஸ்க்கு அல்டிமேட் டெஸ்ட்… விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை…. நாளை காத்திருக்கும் மெகா அரசியல் ட்விஸ்ட்…..!

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…

15 minutes ago

“நட்புனா சும்மாவா?”…. இன்ஸ்டா, வாட்ஸ்அப் மூலம் இந்தியக் கடற்படையை வளைத்த பாகிஸ்தான் பெண் உளவாளிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…

23 minutes ago

இதை உடனே பாருங்கள்..! இ-ஸ்கூட்டரும் இப்படி ஆகுமா?… லட்சக்கணக்கில் நஷ்டம்… கன்டெய்னருக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறியடித்து ஓடிய டிரைவர்…!!

இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…

23 minutes ago

நிலநடுக்கத்தால் வந்த சோதனை…. டெல்லியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…

30 minutes ago

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

37 minutes ago