#image_title
வடிவுக்கரசி தமிழ் சினிமாவில் பணியாற்றும் மூத்த நடிகை ஆவார். தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் வடிவுக்கரசி.
கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தில் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானவர் வடிவுக்கரசி. ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்திருந்த வடிவுக்கரசி பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களில் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
இதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதற்கு அடுத்ததாக பல திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். மந்திராலயா ஆர்ட்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் அன்னை என் தெய்வம் என்னும் திரைப்படத்தை தயாரித்தும் இருக்கிறார் வடிவுக்கரசி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னால் இயக்குனர் ஏபி நாகராஜன் அவர்களின் உறவினர் ஆவார். சினிமா மட்டுமல்லாமல் 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் வடிவுக்கரசி. இவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் சரி கச்சிதமாக நடிக்க கூடியவர் வடிவுக்கரசி.
ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வடிவுக்கரசி பாரதிராஜா அவர்களிடம் திமிராக சண்டை போட்ட அனுபவத்தை கூறியிருக்கிறார். அது என்னவென்றால், கிழக்கு சீமையிலே படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியா என்ன நடிக்க என்னை வர சொல்லிட்டாங்க. அன்னிக்கு எனக்கு பர்த்டே .எல்லாருக்கும் ஸ்வீட் எல்லாம் கொடுத்துட்டு அவர்கிட்ட போகும்போது உனக்கு கேரக்டர் இல்ல விஜயகுமார் படத்துல தனியா தான் இருக்கணும். அப்பதான் சிம்பதி கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டாரு.
எனக்கு சுர்ரினு தலைக்கு ஏறிடுச்சு. எப்போ அந்த முடிவு எடுத்தீங்க அப்படின்னு கேட்டேன். நேத்து நைட்டு தான் அப்படின்னு சொன்னாரு பாரதிராஜா சார். நைட்டுனா அப்போ நான் ட்ரெயின் ஏறுறதுக்கு முன்னாடியே சொல்லிருக்கலாமே நீங்க ஏன் சொல்லல எவளுக்காக இந்த முடிவு எடுத்தீங்க எவ்வளவு வர வைக்கிறதுக்கு முடிவெடுத்தீங்கன்னு இவ்வளவு திமிரான அவர்கிட்ட கேள்வி கேட்டேன். அதற்கு காரணம் விஜயகுமார் சார் அவங்க மனைவி மஞ்சுளா தான் அந்த நேரத்துல எல்லா படத்திலும் அப்போ ஜோடியா பண்ணிட்டு இருந்தாங்க. அதனால இருக்குமா நான் அவ்வளவு திமிரா கேட்டேன்.
அவ்வளவுதான் அங்க இருக்கவங்க எல்லாம் கோபப்பட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் பாரதிராஜா சார் நான் யாரையுமே நடிக்க வைக்கல அப்படி உன் இடத்துல வேற யாரையாவது நடிக்க வச்சா என்ன செருப்பை கொண்டு அடி அப்படின்னு ஒரு கேள்வி கேட்டாரு. அப்புறம் என்ன கிளம்பி வந்துட்டேன். ஆனாலும் அவ்வளவு திமிரா நான் பேசி இருக்கவே கூடாது அப்படின்னு சொல்லி இருக்கிறார் வடிவுக்கரசி.
தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…
பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…
1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…