#image_title
ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர் ஆவார். 2019 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து அரிது அரிது, பொறியாளர், வில் அம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
2018 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார் ஹரிஷ் கல்யாண். அதற்கு பிறகு நல்ல கதை அம்சம் வாய்ந்த சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. 2018 ஆம் ஆண்டு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் திருப்புமுனையை பெற்றார்.
அதற்கடுத்ததாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, ஓ மனப் பெண்ணே, பார்க்கிங் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் தற்போது இவர் நடிப்பில் லப்பர் பந்து என்ற திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்ததாக இவர் நடிப்பில் டீசல் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் கடவுள் நம்பிக்கை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் H வினோத் கடவுள் எனக்கு தேவைப்பட்டார் அப்படின்னு சொல்ற மாதிரி அதை நான் ஒத்துக்குறேன். நமக்கு மேல ஒரு போர்ஸ் இருக்குன்னு நான் நம்புறேன். ஆனா அது வந்து நம்ம உணர்ந்து கடவுளை கும்பிடணும் மத்தவங்க மேல திணிக்க கூடாது.
சபரிமலைக்கு போவேன் ரம்ஜான் நேரத்துல அந்த கடைசி நாள் பாஸ்டிங் இருந்து மாஸ்க்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எனக்கு வந்து கடவுள் எல்லாம் பொதுவானவர் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…