“என்னை உனக்கு பிடிக்கலையா…?” 60 வயது மனைவி முகத்தில் ஆசிட் வீசி…! தூங்கிய போதே அலறி துடித்த கொடூரம்…. நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

Spread the love

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைக்கல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். சேகோ ஆலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், 60 வயதுடைய முத்தம்மாள் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். முத்தம்மாளின் நடத்தையின் மீது ஆரம்பம் முதலே சந்தேகமடைந்த கணவன் ஆறுமுகம், கடந்த ஒரு வருடமாக அவரை தினந்தோறும் அடித்து, உதைத்துக் கொடூரமாகச் சித்திரவதை செய்து வந்துள்ளான்.

கணவனின் கொடுமை தாங்காமல் முத்தம்மாள் தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர்கள் மூலம் பஞ்சாயத்து பேசி, “இனிமேல் சந்தேகப்பட்டு அடிக்க மாட்டேன்” எனக்கூறி முத்தம்மாளை ஆறுமுகம் தனது வீட்டிற்கு அழைத்துவந்துள்ளான்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முத்தம்மாளை எழுப்பிய ஆறுமுகம், “என்னை உனக்கு பிடிக்கவில்லையா?” எனக்கூறி மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசித் தகராறு செய்துள்ளான். பின்னர் முத்தம்மாள் அமைதியாகப் படுத்து உறங்கிய நிலையில், ஆத்திரமடைந்த அரக்கன் ஆறுமுகம், தான் மறைத்து வைத்திருந்த கொடூர ஆசிட்டை மனைவியின் முகத்தில் ஊற்றியுள்ளான்.

முகமெல்லாம் வெந்துபோய் வலி தாங்க முடியாமல் முத்தம்மாள் அலறித் துடித்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆத்தூர் நகர போலிஸார், மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கொடூரக் கணவன் ஆறுமுகத்தைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: அரசு பேருந்து பெரும் விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி…. தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்…!

மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…

36 seconds ago

வங்கக்கடலில் உருவாகும் புது புயல் சின்னம்…. 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் லெவல்’ மஞ்சள் அலர்ட்… 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை…..!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

6 minutes ago

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

7 minutes ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

11 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

17 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

29 minutes ago