உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் அவரை தாக்கி தலையை மொட்டை அடித்து தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இர்ஷாத் என்ற நபர் தன்னுடைய மனைவி மற்றொரு அவனுடன் தொலைபேசியில் பேசியதாக சந்தேகித்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய உறவினர்கள் காப்பாற்றியதாகவும் பிறகு குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், செப்டம்பர் 10ஆம் தேதி என்னுடைய கணவர் இர்ஷாத், நான் வேறு ஒருவருடன் பேசுவதாக சந்தேகித்து என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
பிறகு என்னை அடித்து உதைத்து குத்தினார். ஒரு ரேசரால் என்னுடைய தலையை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்து என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்களும் குழந்தைகளும் உடனடியாக வந்து அவரை காப்பாற்றிய நிலையில் இர்ஷாத் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டார். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…