“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கங்கை நதியில் நின்றுகொண்டு மாலை அணிவிக்கப்பட்ட தனது மனைவியின் புகைப்படத்துடன் அந்த நபர் இறுதிச் சடங்குகளைச் செய்வது போலக் காட்சியளிக்கிறார்.

தன்னுடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய ரீல்ஸ் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்ததே இதற்குக் காரணம் என்று அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை கண்டித்தும், அறிவுரை கூறியும் மனைவி கேட்கவில்லை என்றும், இதனால் மனமுடைந்த தான் அவரோடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும் விதமாக அவர் எனக்கு இறந்துவிட்டதாகக் கருதி இந்தச் சடங்கைச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ ‘கர் கே கலேஷ்’ (Ghar Ke Kalesh) என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் மத்தியில் இது விவாதப் பொருளாகியுள்ளது. சிலர் சமூக வலைதள மோகத்தால் குடும்ப உறவுகள் சிதைந்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இதுபோன்ற மதச் சடங்குகளைச் செய்வது முறையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“இளம் வயதிலேயே கை நடுக்கமா? அலட்சியம் வேண்டாம்!… நரம்பியல் நிபுணர் எச்சரிக்கும் அந்த 8 முக்கிய காரணங்கள்… இதிலிருந்து தப்பிப்பது எப்படி?”

இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…

7 seconds ago

கொலையா? தற்கொலையா? வீட்டிற்குள் பிணமாக மீட்கப்பட்ட பெண்… மணப்பெண்ணின் மர்ம மரணம் – பின்னணி என்ன..?

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…

6 minutes ago

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த கோரம்… விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த இரும்பு கேட்.. பதறவைக்கும் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…

7 minutes ago

“வேற சாதி பையனை கல்யாணம் பண்ணுறியா” 9 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் சுட்டுக்கொன்ற கொழுந்தன்.. நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள…

7 minutes ago

“உங்க ஹெல்மெட்டை பாதுகாக்க புது ஐடியா” இனி திருடர்கள் கிட்டயே நெருங்க முடியாது…வைரலாகும் ஹெல்மெட் பாதுகாப்பு வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் விலையுயர்ந்த ஹெல்மெட்கள் திருடப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக 1,500 முதல் 8,000 ரூபாய்…

8 minutes ago

மாறிவரும் பருவநிலை! பரவும் சளி, இருமல்… அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கும் ‘மேஜிக்’ மருந்து… இனி ஆஸ்பத்திரிக்கு நோ சொல்லுங்க!

பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கு, நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி மசாலாப்…

11 minutes ago