பீகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்க மற்றும் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றத்திற்காக தயாந்த் குமார் என்ற நபர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-இல் திருமணமான இவருக்கு, தன் மனைவி வேறொரு நபருடன் தகாத உறவில் இருப்பதாக தீவிர சந்தேகம் இருந்துள்ளது. இதன் காரணமாக, மனைவியின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டு தயாந்த் குமார் சில மாதங்கள் தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த தயாந்த் குமார் பிடிபட்டார். கைதான பின்னர் போலீசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தன் மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாகவும், அவர் வேறொரு நபருடன் ஓடிவிட்டதாக நினைத்த கோபத்தில் இந்த காரியத்தைச் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், “நான் பெரும் தவறு செய்துவிட்டேன்” என்றும் விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தயாந்தின் கைபேசியை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தத் தரவுகள் வேறு எங்கும் பகிரப்பட்டுள்ளதா அல்லது அழிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள சைபர் டிஎஸ்பி ஆசிஃப் ஆலம், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…