“முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்….” சுத்தியலால் கொடூரமாக அடித்து…! ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நவம்பர் 24ஆம் தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மணமகன் அகஸ்டின் ஜோஸ்வா உடனடியாகத் தாம்பத்திய உறவுக்கு ஆசைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், புதுப்பெண், “முதல் இரண்டு நாட்கள் இருவரும் மனம் விட்டுப் பேசிப் பழகலாம், அதன் பிறகு உறவைத் தொடங்கலாம்” என்று கூறி உறவுக்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகஸ்டின் ஜோஸ்வா, அறையில் இருந்த சுத்தியலை எடுத்து அப்பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் காயமடைந்த அப்பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

அகஸ்டின் ஜோஸ்வா, புதுப்பெண்ணை அறைக்குள் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். மறுநாள் காலையில் உறவினர்கள் அறையைத் திறந்து பெண்ணை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

புதுப்பெண் அளித்த வாக்குமூலத்தில், அகஸ்டின் ஜோஸ்வாவுக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவர் மனம் விட்டுப் பேசாமல் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் இனிமேல் அவருடன் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அகஸ்டின் ஜோஸ்வா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Devi Ramu

Recent Posts

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

6 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

11 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

16 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

21 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

56 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

1 மணத்தியாலம் ago