பொதுவாகவே வீடுகளில் எங்கு பார்த்தாலும் பல்லி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். அவை சில நேரங்களில் அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்துகின்றன. சிலர் அவற்றைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறார்கள். உண்மையிலேயே இவை பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகின்றன என்றாலும் அவை வீட்டில் ஆங்காங்கே ஊர்ந்து சென்றால் பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இப்படி பல்லிகளை பார்க்க பிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். பல்லி தொல்லைக்கு முக்கிய காரணம் அவை உணவு தேடி உங்கள் வீட்டுக்கு வருவதுதான்.
அதற்கான உணவு கொசுக்கள், ஈக்கள், எறும்புகள், அந்து பூச்சிகள் மற்றும் சிலந்திகள் ஆகிய சிறிய பூச்சிகள் தான். எனவே இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தினால் வீட்டில் பல்லி தொல்லை இருக்காது. பொதுவாகவே பல்லிகள் கடுமையான வாசனைகளை ஒருபோதும் விரும்பாது. இப்படியான வாசனைகளை இயற்கையில் நிறையவே உள்ளது. நச்சுத்தன்மையற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இயற்கை வெரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் இருந்து பல்லி தொல்லையை அறவே விரட்டி விடலாம்.
இதற்கு பூண்டு மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிலவற்றை செய்யலாம். இதுபோன்ற பொருட்களை நசுக்கி வீட்டின் ஜன்னல் அல்லது திறந்தவெளி மூளைகளில் வைத்து விட்டால் அந்த வாசனைக்கு பல்லிகள் வராது. பல்லிகள் பொதுவாக குளிர்ச்சியான, ஈரமான மற்றும் இருண்ட மூலைகளால் ஈர்க்கப்படுகின்றன. அவை சமையலறைகள், குளியல் அறைகள் மற்றும் சேமிப்பு அறைகளுக்குள் ஒளிந்திருக்கும். எனவே சுற்றுச்சூழல் சாதகமற்றதாக மாறும்போது
பல்லிகள் இயற்கையாகவே வெளியேறிவிடும். அவை பெரும்பாலும் இடைவெளிகள், விரிசல்கள் மற்றும் துவாரங்கள் வழியாக நுழைகின்றன. புகைப்பட பிரேம்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது. இந்த உள்ளீடுகளை தடுப்பதன் மூலம் பல்லிகள் உள்ளே வருவதை தானாகவே தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் முட்டைகள் என்றால் அவற்றுக்கு பிடிக்காது. அதன் வாசனையை முற்றிலுமாக வெறுத்து விடும். எனவே வீட்டின் மூலைகளில் வெறும் முட்டை ஓடுகளை வைக்கலாம். இந்த எளிய மற்றும் பாதுகாப்பான முறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்கள் வீட்டில் இனி பல்லி தொல்லை இருக்காது.
மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச்…
அவன் பெயர் சிவக்குமார். அவன் தன் அத்தை மகளை ஆழமாகக் காதலித்து வந்தான். அவள் தன் விரல் அசைவுக்கு ஏற்ப…
சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பேசியதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.…
சமீபத்திய ஊடகத் தகவல்களின்படி, சர்ச்சைகளில் சிக்கியுள்ள தமிழக சட்டமன்ற துணை சபாநாயகரும் துறையூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். ரவிசங்கர் மற்றும்…
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ நரேஷ் பிரசாத் சிங் தொடர்பான வீடியோ…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாத காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில்,…