பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளில் எலி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். காலநிலை மாற்றத்தின் போது எலிகள் மற்றும் பூச்சிகளின் தொல்லை வீட்டில் தாங்க முடியாது. அந்த நேரத்தில் எலிகளை எப்படி விரட்டலாம் என நாம் யோசிப்போம். இதுபோன்ற உயிரினங்கள் வீட்டில் நோய் தொற்று, பொருள் சேதம் மற்றும் உணவுகளை சேதப்படுத்தும். இதனால் எலிகளை நிரந்தரமாக வெளியேற்றவும் உங்களிடத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும் இந்த முறையை பின்பற்றுங்கள். எலி தொல்லையை குறைக்க எலி பொறிகள் மற்றும் இயற்கை தடுப்புகளை பயன்படுத்தலாம். குறும்புத்தனத்திற்காகவே பிறந்த எலியை விரட்ட விலை உயர்ந்த ரசாயனங்களோ அல்லது எலி விஷங்களோ தேவையில்லை.
மாறாக நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தலாம். ஒரு வீட்டில் எலி இருந்தால் அதன் எச்சங்கள் சிறியதாகவும் கருமையாகவும் இருக்கும். அதனை நம்முடைய அலமாரிகள் மற்றும் உபகரணங்களுக்கு பின்னால் அல்லது இருண்ட மூலைகள் போன்ற இடங்களில் காண முடியும். இந்த எலி எச்சங்கள் தொற்றின் அளவின் தீவிரத்தை குறிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் தொற்றுகள் அதிகமாகும். எலிகள் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதால் பல பொருட்களை சேதப்படுத்தி விடும். குறிப்பாக தூசி நிறைந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும். வழக்கமாக எலிகள் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கடித்து வைப்பது அதிகம்.
அதனால் எலிகள் இரவில் வரும் பாதையை தெரிந்து கொண்டு அந்த இடங்களில் மிளகு கலந்த நீரை ஊற்றி அல்லது தெளித்து விடலாம். ஏனென்றால் மிளகு வாசனை வெளியே திசை திருப்பும். கரு மிளகாய் அரைத்து ஒரு பொடி செய்து சமையலறையின் மூலைகள் மற்றும் அலமாரிகளுக்கு பின்னால், எரிவாயு அடுப்புகளை சுற்றி அல்லது சேமிப்பு அறைகளின் விரிசல்கள் போட்டு வைக்கவும். வீட்டில் எலிகள் நிரந்தரமாக இருந்தால் கற்பூரம் மற்றும் புதினா எண்ணெய் ஆகிய இரண்டையும் விலகுடன் கலந்து ஒரு பஞ்சு உருண்டையை உருட்டி அந்த இடத்தில் வைக்கவும். இது எலியை அந்த பக்கத்திற்கே வரவிடாமல் விரட்டியடிக்கும்.
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…
நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…