திருச்சியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், இரண்டு நாய் குட்டிகளை சுவற்றில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்பவர், தனது வீட்டின் முன் கோலமிட்ட அண்டை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலின் போது தனது 3 வயது மகனுக்கு காயம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த இரண்டு சிறிய நாய் குட்டிகளைத் தூக்கி சுவற்றிலும் சாலையிலும் கொடூரமாக அடித்துள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவைக் கண்டு கொதிப்படைந்த விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஒரு நிமிடம் நிதானமிழந்து செய்த இந்த கொடூரச் செயலால், அந்தப் பெண் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதே சமயம், மீனாட்சியின் குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் அண்டை வீட்டுப் பெண் புவனேஸ்வரி மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு சிறிய தகராறு மற்றும் ஆத்திரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவு, அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, அவரை சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…