பானுமதி கிட்ட பேசவே பயந்த தயாரிப்பாளர்.. கால்ஷூட் கேட்க எம்ஜிஆர் பார்த்த வேலை.. சுவாரஸ்ய சம்பவம்..!

Spread the love

இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்ற பெயரிட்டவர்தான் நடிகை பானுமதி. இவர் தமிழில் பெரும்பாலான திரைப்படங்களில் நடித்துள்ளார். 1939 ஆம் ஆண்டு வெளியான வரா விக்ரயம் என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பானுமதி அதே ஆண்டில் வெளியான சந்தன தேவன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கால் அடி எடுத்து வைத்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமுக்தி, அபூர்வ சகோதரர்கள், லைலா மஜ்னு மற்றும் நல்ல தம்பி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பானுமதி நடித்துள்ளார். 1954 ஆம் ஆண்டு வெளியான சக்கரபாணி, 1975 ஆம் ஆண்டு சிவக்குமார் பானுமதி நடிப்பில் வெளியான இப்படியும் ஒரு பெண் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் பானுமதி இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாடகியாகவும் பல்வேறு திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய இருந்தாலும் பானுமதி தனக்கே பிடிக்கவில்லை என்றால் படத்தின் பாதிலேயே படபிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி விடுவாராம். அதேபோல சகர் நடிகர்கள் யாரும் பானுமதி இடம் பேசவே பயப்படுவார்களாம். அந்த அளவிற்கு வெளிப்படையாக பேசக்கூடிய பழக்கம் உள்ள பானுமதி மீது மக்கள் திலகர் எம்ஜிஆருக்கு பெரிய மரியாதை இருந்துள்ளது. தான் முதல்வரான பிறகும் கூட எம்ஜிஆர் பானுமதி மீது அந்த மரியாதையை அப்படியே வைத்திருந்தாராம்.

எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் அவரை வைத்து பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவருமான சின்னப்ப தேவர், தான் முதல் படத்தில் படம் தயாரிக்க முடிவு எடுத்தபோது பானுமதியை நாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் நேரடியாக பானுமதி இடம் சொல்லாமல் எம்ஜிஆர் இடம் சென்று பானுமதி டேட் வாங்கி கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு முன்பும் பானுமதி எம் ஜி ஆர் உடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்ததால் எம்ஜிஆர் மற்றும் பானுமதி இணைந்து நடித்தால் சரியாக இருக்கும் என்று சின்னப்ப தேவர் யோசித்துள்ளார்.

இவரின் பேச்சைக் கேட்ட எம்ஜிஆர் பானுமதி இடம் கால் சூப் கேட்காமல் அவருடைய கணவரிடம் ஃபோன் செய்து சின்னப்ப தேவர் முதன் முதலில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் அதில் பானுமதி அம்மா நடிக்க வேண்டும் என்று அவர் விருப்பப்படுகிறார், அதற்கு நீங்கள் தான் சம்மதம் வாங்கி தர வேண்டும் என எம்ஜிஆர் கூறிய நிலையில் அதைக் கேட்ட பானுமதி கணவரும் பானுமதி இடம் சொல்ல அவரும் ஒப்புக்கொண்டார். அப்படி உருவான திரைப்படம் தான் தாய்க்குப்பின் தாரம். எம்ஜிஆர் மற்றும் பானுமதி இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் தான் சின்னப்ப தேவர் முதலில் தயாரித்த திரைப்படமாகும்.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago