அடுத்தடுத்து ரிலீசாகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்.. அதிக பட்ஜெட் எதுன்னு தெரியுமா..? வெளியான தகவல்கள்..!!

By Priya Ram

Updated on:

துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன், 2 ஜெய்லர் என பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. அடுத்து திரைக்கு வரவுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் குறித்து பார்ப்போம். முதலாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் உருவான படம் லியோ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான லியோ அடுத்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள “அயலான்” படம் அறிவியல் கதையை மையமாக கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 100  கோடி பட்ஜெட்டில் உருவான அயலான்  படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என படக் குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் படம் பொங்கலுக்கு தள்ளி போனது.

அடுத்ததாக கார்த்தி நடித்த ஜப்பான் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட நான்கு மொழிகளில் வெளியாகிறது. கொள்ளைக்கார கூட்ட தலைவனின் வாழ்க்கை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படப்பிடிப்பு இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியன்-2 படத்தை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படம் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரில்லர் கதை அம்சத்துடன் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் புதுப்பொலிவோடு தோற்றமளிப்பதால் படத்தின் முன்னோட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் நவம்பர் மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.

கடைசியாக மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபலங்களின் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
Priya Ram