தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் இறுதியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் பிரசாந்த் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விஜய் உடன் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதனிடையே விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எச். வினோத் விஜயின் கடைசி படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதை உறுதி செய்துள்ளார். இந்த திரைப்படம் அரசியல் பேசாது என்றும் கமர்சியல் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…