ரணகளத்திலும் குதூகலமா..? ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.. அங்கிருந்த பெண்கள் செய்த மோசமான காரியம்… வைரலாகும் பக்கீர் வீடியோ..!!

Spread the love

அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றபோது, திடீரென அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் டோமாஸ் ஆலன் (31) என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைத் துரிதமாகச் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த உயிரைப் பறிக்கும் அச்சுறுத்தல் மற்றும் பதற்றமான சூழலிலும், அங்கிருந்த சில பெண்களின் வினோதமான செயல் கேமராக்களில் சிக்கி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரிகள் அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்று கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சில பெண்கள் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மதுபானப் போத்தல்களை நைசாகத் திருடிச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் அந்தப் பெண்கள், ஒருபுறம் மரண பயத்தில் மக்கள் அலறியடித்து ஓடும்போது, எந்தவிதப் பதற்றமும் இன்றி மதுபானப் போத்தல்களை மறைத்து எடுத்துச் சென்றது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து உயிரைத் தற்காத்துக் கொள்வதை விட, மதுபானப் போத்தல்களைச் சேகரிப்பதிலேயே அந்தப் பெண்கள் குறியாக இருந்த இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. “மரண பயத்திலும் மதுபானமா?” என்று பலரும் இந்தச் செயலைக் கண்டித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டின் தலைவரே குறிவைக்கப்பட்ட இத்தகைய ஆபத்தான தருணத்தில், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நடந்துகொண்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

5 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

5 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

5 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

5 மணத்தியாலங்கள் ago