மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் அருகேயுள்ள வரப் பகுதியில் நடைபெற்று வந்த நவரத்திரி கார்பா நடன நிகழ்ச்சியில், கத்திகளுடன் புகுந்த கும்பல் ஒன்று ஆயுதங்களை வீசி பீதியை ஏற்படுத்திய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காகப் மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல், கார்பா நிகழ்ச்சியில் புகுந்து ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளது.
இதனால் அச்சமடைந்த மக்கள் அங்கிங்கமாக அலறியடித்து ஓடியதால் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திட்வாலா காவல்நிலையப் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அப்பகுதியில் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தலேகான் தாடே பகுதியில் உள்ள சிவாஜி சௌக் அருகில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம்…
திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…