விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற பிரபலமானவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே பிரபலமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகளின் இல்ல திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் இவருடைய உணவு தான் பேமஸ். நீண்ட நாட்களாக சமையல் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக அறிமுகமானார்.
இருந்தாலும் அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. அதேசமயம் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் திருமணம் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஷாக் கொடுத்தார் ஜாய் கிரிஸ்டில்டா. இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜூவும், அவரது முதல் மனைவியான ஸ்ருதியம் எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் நேற்று கோவையில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவியான ஸ்ருதிதியுடன் கலந்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா, தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘ரஹா’ என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஹா ரங்கராஜ் என்று ஹேஷ்டேக் உடன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…